Chidambaram h.raja

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் 3 நாள் விசாரணைக்காவல் முடிந்து நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.பி.ஐ அதிகாரிகள் காவல் நீட்டிப்பு வழங்க மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்தி சிதம்பரத்தை வரும் 12-ம் தேதி வரை விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.

Advertisment

இந்த நிலையில் கார்த்திக்கிடம் முழு விசாரணை நடத்தப்பட்ட பின் 'சீனியர்' சிதம்பரம் கைதாகலாம் என பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது:

Advertisment

'Senior' Chidambaram may be arrested h.raja post on Twitter