பிலிப்பைன்ஸில் நடந்த 2023-ஆம் ஆண்டுக்கான 22-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில்இந்தியா சார்பில் பங்கேற்ற, சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தைச் சேர்ந்த, 15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தது.
இச்சந்திப்பில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பில் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் செண்பகமூர்த்தி, அதுல்யா மிஸ்ரா இஆப, மேகநாத ரெட்டி இஆப ஆகியோர் கலந்து கொண்டனர்.