Advertisment

“எந்த குழப்பமும் இல்லை!” - செங்கோட்டையன் பேட்டி!

Sengottayan speech about higher secondary exam date

Advertisment

“தமிழகத்தில் தற்போது +2 பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாகப் பள்ளி தேர்வுகளை அறிவிப்போம். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதியைப் பொறுத்தே பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் செங்கோட்டையன், 17ஆம் தேதி திறந்து வைத்து, கபடி, வாலிபால், டேப்பிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து வீரர் வீராங்கனைகளுடன் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "சி.பி.எஸ்.இ.பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது +2 பொதுத்தேர்வு குறித்தும் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை; ஒன்றன்பின் ஒன்றாகப் பள்ளி தேர்வுகள் குறித்து அறிவிப்போம். மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவொரு விளையாட்டிலும் கலந்துகொள்ள நிபந்தனைகள்இல்லை. மாவட்டம்தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.35 கோடி கேட்டுள்ளோம். மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால், இன்னும் வழங்கப்படவில்லை. நூலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தற்காலிக ஆட்கள் கொண்டு நிரப்பப்படும்" என செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.

sengottaiyan Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe