விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த 64 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் செங்கோட்டையன்...

கிராமப்புற மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan speech about speech

சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசிய அவர், "கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த 69 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் விளையாட்டு பயிற்சி எடுப்பதற்காகபள்ளிகள், வருவாய்த்துறை அலுவலகங்கள் உட்பட அரசு இடங்களில் தகுந்த கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுவருகிறது. தற்பொழுது விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு 3 சதவீதம் உள்ள நிலையில் விரைவில் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விரைவில் 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் ஜெர்மன் நாட்டிற்கு கால்பந்து பயிற்சிபெற அனுப்பப்பட உள்ளார்கள்" எனவும் தெரிவித்தார்.

sengottaiyan sports
இதையும் படியுங்கள்
Subscribe