admk

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.

Advertisment

இந்தநிலையில், அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் கட்சி நிர்வாகி ஒருவர் காயமடைந்தார்.இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisment

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு ஒன்றைமேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு ஓபிஎஸ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்செங்கோட்டையன்.