Advertisment

போனஸ் கொடுத்த செங்கோட்டையன்...!

கோபி செட்டிபாளையம் அருகில் உள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அதில் உள்ள உறுப்பினர்கள் 583 பேருக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூபாய்.7,77,720-ஐ தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 8 ந் தேதி வழங்கினார்.

Advertisment

இந்த ஆண்டு 2,505 பள்ளிகளுக்கு அனுமதி நீட்டிற்பிற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் நல்ல மழை பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. மேலும் வெள்ளச்சேதமும் குறைவாக உள்ளது என்றும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பெற்றோர் பாதுகாப்பாக வர வேண்டும். நூலகங்களின் நேரத்தை காலநீட்டிப்பு செய்வது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதுஎன செங்கோட்டையன் கூறினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சிகளில் ஆவின் தலைவர் காளியப்பன், கோபி ஆர்.டி.ஓ.ஜெயராமன், தாசில்தார்கள் தியாகராஜன், வெங்கடேஷ், உட்பட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

DIWALI BONUS Erode sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe