Skip to main content

"கால நீட்டிப்பு செய்ய முடியாது " -அமைச்சர் செங்கோட்டையன்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

sengottaiyan about tet exam validity period extension

 

 

டெட் தேர்வு எழுதியவர்களுக்கான பணியில் சேரும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

 

ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்கு ஆசிரியர் பணிக்கு செல்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சூழலில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்க்கப்பட ஏழு ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துடன் காலக்கெடு முடிவடைந்தது. ஆனால், இவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கல்வியமைச்சர் செங்கோட்டையன், "2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்" என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அறிவிப்பு வெளியீடு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Publication of notification on Secondary Teacher Posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை http://www.trb.tn.gov.in வாயிலாக இன்று (09.02.2024) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.02.2024 முதல் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு’  - பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Attention to those who have succeeded in TET examination  School Education Department

 

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (25.10.2023) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் தேர்வானது (TET Exam) 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 

இந்த தேர்வுக்கு தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கில பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

 

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 2012 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5.5 மதிப்பெண்களும், 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்களும், 2014 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.5 மதிப்பெண்களும், 2017 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்களும், 2019 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 2022 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 0.5 மதிப்பெண்களும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதில் பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.