sengottaiyan

போராட்டம் நடத்துவோர் ஆலோசனை வழங்கினால் நல்லது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,தமிழகத்தல் எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றங்களை தடுக்க ஆசிரியர்களுக்கு கருத்துக்கள் வழங்கப்படுகின்றன.

Advertisment

குறைந்தது 50 மாணவர்களையாவது ஒவ்வொரு பள்ளியிலும் சேர்க்க வேண்டும். போராட்டம் நடத்துவோர் கூடுதல் மாணவர்களை சேர்க்க ஆலோசனை வழங்கினால் நல்லது. தமிழகத்தில் 10 மாணவர்களுக்கு குறைவாக 1,315 அரசு பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளை மூடவோ அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் முடிவோ இல்லை. ஒரு மாணவர் பயிலும் பள்ளிக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது என்றார்.

Advertisment