Advertisment

பொன்பரப்பி - 100 குடும்பங்களுக்கு மேல் திமுக நிவாரணம்! 

dmk

கரோனா நோய்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றியத்தில் பொன்பரப்பி ஊராட்சியில் உள்ள விளிம்புநிலை மக்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நெசவாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 100 குடும்பங்களுக்கு மேல் திமுக நிவாரணம் வழங்கியது.

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, ஒன்றிய கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஏற்ப்பாட்டில் மாவட்டச் செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்கள்.

Advertisment

மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், பொன்பரப்பி கிளைக்கழக செயலாளர் கே. முருகானந்தம், பிரதிநிதி மு. செங்குட்டுவன், காலணி கிளைக்கழக செயலாளர் எல். அருள்ராஜ், பிரதிநிதி சி. முருகேசன், முதலியார் நகர் கிளைக்கழக செயலாளர் வை. சிவக்குமார், பிரதிநிதி செந்தில்குமார் ஆனந்தன், செல்வமணி, செந்தில், ஜோதி,சிருகளத்தூர் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் கழக நிருவாகிகள் உடன் இருந்தனர்.

corona help admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe