Advertisment

செந்துறை ஒன்றியத்தில் 11 நபர்களுக்கு கரோனா தொற்று... எச்சரிக்கையாய் இருப்போம்... மு. ஞானமூர்த்தி

ariyalur

Advertisment

எச்சரிக்கையாக இருந்து கரோனாவை முறியடிப்போம் எனக்கூறியுள்ளார் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய திமுக (வடக்கு)ஒன்றியச்செயலாளர் மு. ஞானமூர்த்தி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து செந்துறை ஒன்றியம் சிறுகளத்தூர், வஞ்சினபுரம், நம்மங்குணம், சொக்கநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு வந்த 11 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

அவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நல்ல உழைப்பாளிகள். அவர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியால் கரோனாவை அழித்து விரைவில் வீடு திரும்புவார்கள்.

Advertisment

அதே நேரத்தில் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு தொற்று ஏற்ப்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.அரியலூர் மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவை இணைந்து கரோனாவை மாவட்டம் முழுவதும் பரவாமல் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

ஒரே நாளில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், ஊராக வளர்ச்சித் துறை அதிகாரிகள் / நகராட்சி துறை அதிகாரிகள், இரவு, பகல் பாராமல் தூக்கத்தை இழந்து, குடும்பத்தைக் கூட பார்க்காமல், நல்லது, கெட்டதுக்குப் போக முடியாமலும் செய்த முழு பணியையும் தவிடு பொடியாக்கிவிட்டது என்றாலும் நமது தொடர் முயற்சிகளாலும், சுய கட்டுப்பாடுகளாலும் கரோனாவை முறியடிப்போம்.

http://onelink.to/nknapp

நிலைமை சரியாகும் வரையில் மேற்கண்ட கிராமங்களுக்கு வெளி ஆட்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அந்தக் கிராமங்களில் இருப்பவர்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். பக்கத்து வீடுகளுக்குக் கூட செல்வதைத் தவிர்க்க வேண்டும். தனித்திருப்போம்!வீட்டில் இருப்போம்!சமூகப் பரவல் வராமல் தடுப்போம்!நம் சந்ததியைக் காப்போம்!இவ்வாறு கூறியுள்ளார்.

Ariyalur corona virus m.gnanamoorthy sendurai
இதையும் படியுங்கள்
Subscribe