Advertisment

குறைந்த தண்ணீர் வரத்து - செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு குறைப்பு

j

Advertisment

மாண்டஸ்புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் வட தமிழகத்தில் அதிகப்படியான மழை பதிவானது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தொடர் நீர்வரத்தால் 22.35 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் வினாடிக்கு 1,036 கனஅடி நீர் வரும் நிலையில், இன்று காலை 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு 300 கனஅடியாக குறைந்துள்ளது.

இருந்தாலும் தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் தாலுகாவில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சூழ்நிலைகளை கருத்தில் கொண்டுபள்ளி தலைமையாசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

water
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe