நேற்று (06.04.2021) வாக்குப்பதிவின்போது, செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தைபார்வையிட வந்தகோவைதொண்டாமுத்தூர் தொகுதிதிமுக வேட்பாளர் கார்த்திகேயசிவசேனாதிபதியின் கார் மீது அதிமுகவினர் கட்டையால் தாக்க முயன்றதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல் தாக்குதலைத் தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்ததாகவும் திமுக வேட்பாளர் கார்த்திகேயசிவசேனாதிபதி குற்றம்சாட்டியுள்ள நிலையில், போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில், கோவை செல்வபுரத்தில் வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த பிரச்சினை தொடர்பாக அதிமுகவினர், திமுகவினர் என மொத்தம் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரியைப் பணிசெய்யவிடாமல் தடுத்தது, நோய் பரப்பும் வகையில் செயல்படுதல்உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.