Advertisment

வெற்றிபெற்ற வேட்பாளர்களை கௌரவித்த செல்வப்பெருந்தகை (படங்கள்)

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 291 இடங்களில் பாஜக மற்றும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.

Advertisment

இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொன்னாடைபோர்த்திகௌரவித்தார்.

Advertisment

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

congress Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe