Advertisment

“சாமி தரிசனம் செய்ய முடியவில்லை” - செல்வப்பெருந்தகை வேதனை!

selvaperunthagi-pm

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது வல்லக்கோட்டை முருகன் கோவில். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில்  கடந்த 2008ஆம் ஆண்டு குடமுழுக்கு  நடந்தது. இந்நிலையில், கோவிலைப் புனரமைத்து குடமுழுக்கு நடத்த, இந்து சமய அறநிலையத் துறையால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு  இன்று (07.07.2025) குடமுழுக்கு நடைபெற்றது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை குடமுழுக்கு விழாவிற்குச் சென்றிருந்தார்.  இருப்பினும் கூட்ட நெரிசல் காரணமாக அவரால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குன்றத்தூரில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “பக்தி இயக்கம் செய்ததை விடப் பக்தி இயக்கம் கண்ட கனவை விட தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை அமைச்சரால் மிகவும் ஆலயங்கள் வழிபாடுகளும் கும்பாபிஷேகங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 3000 கோவில்களுக்கு மேல் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. 4000 கோடிக்கு மேல் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

நானே சாமி கும்பிட முடியவில்லை. அங்குச் சென்றபோது பத்தோடு பதினொன்றாக நின்னுட்டு அதிகாரிகள் வந்து ரொம்ப இர்ரெஸ்பான்சிபிலாதான் இருந்தார்கள். யாரையும் அங்கு வரவேற்பதற்கும் ஆட்கள் இல்லை. நாங்கள் கேட்பாறட்டு தான் கிடந்தோம். அதிகாரிகள் கும்பல் கும்பலாக சேர்ந்து கொண்டு அவர்கள் அவர்களை பாத்துக்கிட்டே தான் இருந்தார்களே தவிர எதற்காக எங்களை அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அதிகாரிகள் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தொகுதி எம்எல்ஏவான என்னால் கூட சாமி தரிசனம் செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார். 

hrce Selvaperunthagai sriperumputhur temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe