Advertisment

கூட்டணிக்கு விவகாரம்; செல்வபெருந்தகையின் அழைப்பும்.. த.வெ.க. பதிலும்..

Selvaperunthagai alliance call and tamilaga vetri kazhagam response

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை வரும் 20/01/2025 ஆம் தேதி சந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. முன்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமனிடம், ‘விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருடைய கொள்கைக்கும் கோட்பாட்டிற்குமான நல்ல முடிவாக இருக்கும் என்று செல்வபெருந்தகை கூறியிருக்கிறாரே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் நிறைய தூரங்கள் இருக்கிறது” என்றார். மேலும் பரந்தூரில் விஜய் எவ்வளவு நேரம் விவசாயிகளை சந்தித்து பேசுவார்? என்ற கேள்விக்கு, “விவசாயிகளுக்கு தேவைப்படும்நேரம் சந்திக்க வேண்டியதுதான்” என்று பதிலளித்தார்.

congress Selvaperunthagai tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe