Advertisment

"அது எங்களுக்கு தோளில் போடும் துண்டு மாதிரி" - செல்லூர் ராஜூ

பரக

Advertisment

கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி.தேவையென்றால் போட்டுக்கொள்வோம், இல்லையென்றால் கழட்டி வைத்துவிடுவோம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் இன்று நடந்துகொண்டிருக்கும் நீட் தேர்வு பிரச்சனைகளுக்குத் திமுகதான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இருக்காது என்று கூறினார்கள்.தற்போது அந்த வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக அரசு மசோதா கொண்டு வந்தோம்.

தற்போது திமுக அதே மாதிரியான நடைமுறையை செய்துள்ளது. இதில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பாமக வெளியேறியது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதிமுக என்றைக்கும் கூட்டணிக்காக ஏங்கியது இல்லை. கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, தேவைப்பட்டால் போட்டுக்கொள்வோம்.இல்லையென்றால் கழட்டிவிடுவோம். கூட்டணி மாற்றத்தால் பாமகதான் பாதிக்கப்படும், நாங்கள் அல்ல" என்றார்.

pmk Sellur K. Raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe