சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக செப் 12ஆம் தேதி தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

Advertisment

sellur raju and rajendra balaji

அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

Advertisment

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்தது. அதில் தமிழக அரசையும், அரசியல் கட்சிகளை குறித்தும் சரமாரி கேள்விளை எழுப்பினார்கள். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று மதியம் ஆஜராகினர். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

இதன்பின் திமுக, அதிமுக, அமமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இனி தொண்டர்கள் யாரும் பேனர்கள் பிளக்ஸ் வைக்க கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சி ஒன்றிற்கு ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜூவும் சென்றிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சிக்காக வருகை தரும் இவர்களுக்கு தொண்டர்கள் பேனர்கள் வைத்திருதனர். இதைபார்த்த ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜூவும் பேனர்களை நீக்கினால்தான் நாங்கள் நிகழ்ச்சிக்கு வருவோம் என்று கூறி ஓரமாக அமர்ந்துவிட்டனர். அதன்பின் தொண்டர்கள் பேனர்களை உடனடியாக நீக்கினார்கள்.