ADVERTISEMENT

பானி பூரி விற்பனை செய்வது போல் கஞ்சா விற்பனை; 6 பேர் கைது

07:23 PM Mar 21, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சிதம்பரம் நகர காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிதம்பரம் நகரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் சின்னக்கடை தெரு அரசமரம் அருகே 3 வாலிபர்கள் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பனை செய்வது போல் நின்று கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

அதில் சிதம்பரம் ஓமக்குளம் ஜமால் நகரைச் சேர்ந்த சுல்தான் (22), சீர்காழி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருணாமூர்த்தி (25), சிதம்பரம் தொப்பையன் தெருவில் வசிக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மேகனா கிராமத்தைச் சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (25) (இவர் பானிபூரி விற்பனை செய்பவர்) என்றும் இவர்கள் மூன்று பேரும் சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய பானி பூரி தள்ளு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

இதுபோல அண்ணாமலை நகர்ப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாமலை நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாரியப்பா நகர் வாட்டர் டேங்க் அருகே மறைவான இடத்தில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த கௌதம் (22), சிதம்பரம் அம்மாபேட்டை அக்ரகார தெருவைச் சேர்ந்த மோதிலால் (22), அம்மாபேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த சைபால் என்கிற ரஞ்சித் (22) என்றும் இவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT