Advertisment

ஈரோடு மணிக்கூண்டு அருகே கஞ்சா விற்பனை; 3 இளைஞர்கள் கைது

Selling Ganja near Erode Manikundu; 3 teenagers arrested

ஈரோடு மணிக்கூண்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஈரோடு டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மணிக்கூண்டு பின்புறம் உள்ள பகுதியில் சந்தேகப்படும்படி 3 இளைஞர்கள்நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

விசாரணையில் அவர்கள் பவானி காமராஜ் நகரை சேர்ந்த சிபி ஹரிஷ் (20), கருங்கல்பாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த பாலக்குமார்(24), ஈரோடு பாளையக்கார வீதியைச் சேர்ந்த மொய்தீன் பயாஸ் (20) ஆகியோர் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Cannabis Erode police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe