Advertisment

குடவாசலில் பள்ளி கல்லூரிகளில் கஞ்சா விற்பனை; ஒருவர் கைது!

திருவாரூரில்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்த ஒருவர் ஐந்து கிலோ கஞ்சாவுடன் போலிஸில் பிடிப்பட்டிருக்கிறார்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், அங்குள்ள இளைஞர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தகவல் கொடுத்தவரிடமே முழு விவரங்களையும் அறிந்துகொண்ட காவலர்கள் விற்பனை செய்யும் நபரை பிடிக்க விரைந்தனர்.

Advertisment

 Selling cannabis at school colleges in Gudavasal; One arrested!

குடவாசல் அருகே உள்ள ஒகை சிவன் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா (33) என்பவர் விற்பனை செய்த கஞ்சா பொட்டலங்களோடு கைது செய்து குடவாசல் காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர். அதில் குடவாசல், நாச்சியார்கோவில், திருச்சேறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்தது. மேலும் அவனிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் சிறப்புநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, வருகின்ற 19.8.19 தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்திரவிட்டார். இந்த உத்திரவின்படி திருச்சி மத்திய சிறையில் இளையராஜா அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட இளையராஜா மீது மேலும் பல்வேறுகுற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார்கூறுகின்றனர்.

arrest kanja police school student Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe