Advertisment

'செல்ஃபி வித் அண்ணாமலை'- மறுத்த கல்லூரி நிர்வாகம்!

'Selfie with Annamalai'- refused by the college administration!

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கொடுக்கப்பட்டதாக விளம்பரம் ஒன்று சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் பரவி வந்தது. அந்த விளம்பரத்தில் 'செல்ஃபிவித் அண்ணா' என தலைப்பில் நடைபெறும் போட்டி நிகழ்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரி தரப்பு நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக சிக்கண்ணா கலைக் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'சமூக ஊடகமான வாட்ஸ் அப் வாயிலாக சிக்கண்ணா கலைக் கல்லூரியின் பெயரை கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாகப் பயன்படுத்தி வருவதாகஅறிகிறோம். இந்த நிகழ்விற்கும்கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற எந்த நிகழ்வுக்கும் அனுமதி அளிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.

Advertisment

Annamalai college
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe