Advertisment

“சுயஉதவிக் குழு பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்!” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

publive-image

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி மைலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர்ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சுய உதவி குழு பெண்களுக்கு கடனுதவி, காவிரி கூட்டுக்குடி நீர் பிரச்சனை, நாடக மேடை, சமுதாயக்கூடம் பராமரிக்க உத்தரவிட்டு உடனடியாக மக்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

அதைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியோ, கூட்டுறவு சங்கங்களுக்கு கடனுதவி கேட்டுவரும் சுய உதவிக் குழு பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

அது போல் பஞ்சாயத்துராஜ் சட்டம் இயற்றிய நாளில் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது என்று கூறினார்.

இந்த குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மயிலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் வேல்கனி ஹரிச் சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை வரவேற்று பேசினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe