ஒரு மணி நேரத்தில் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை கண்டறியும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள optimists நிறுவனத்தின் சுய இரத்த பரிசோதனை கருவியினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisment

Optimists நிறுவனத்தின் இந்தியாவின் முதல் ஒரு மணி நேரத்தில் சுய இரத்தப் பரிசோதனைக் கருவியின் பிரமாண்டமான துவக்க நிகழ்ச்சி கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

Advertisment

இந்தக் கருவியின் மூலம் ரத்தத்தில் கொழுப்பின் அளவு, சிறுநீரக செயல்பாடு, விட்டமின் டி குறைபாடு, சர்க்கரை அளவு, தைராய்டு உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை ஒரு மணி நேரத்திலேயே கண்டறியலாம். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சினிமா இயக்குநர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.