
சிதம்பரம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என சுமார் 500 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டது. அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன்மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் கடந்த 2 மாதத்திற்கு முன் கோரிக்கை மனு அளித்தார்.
அதனடிப்படையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் ஹரிதாஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி செயற் பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் சிதம்பரம் நான் முனிசிபல் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விரைவில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
  
 Follow Us