Published on 06/03/2020 | Edited on 06/03/2020
சேலத்தில் சாமியார் நித்தியானந்தாவின் சீடர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தலைவாசலை அடுத்த ஆறகளூரில் நித்தியானந்தாவின் சீடர் வீரபத்ரானந்தா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் வீரபத்ரானந்தா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.