Advertisment

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாஜி விசிக பிரமுகர் கைது! 

சேலம் அருகே, பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாஜி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

auto driver

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர்.

Advertisment

கடந்த செப். 25ம் தேதி, இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பறையில் ஒருவரை ஹோமோசெக்ஸூக்கு அழைத்ததாக வந்த புகாரின்பேரில் மோகன்ராஜை மகுடஞ்சாவடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் 35 வயது உடைய திருமணமான ஒரு பெண்ணை மோகன்ராஜ் மிரட்டியும், தாக்கியும் பாலியல் வல்லுறவில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் பரவின. சந்தேகத்தின்பேரில் அவருடைய செல்போனை காவல்துறையினர் கைப்பற்றி, ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த செல்போனில் மேற்சொன்ன வீடியோ காட்சிகள் இருந்ததை உறுதி செய்தனர்.

விசாரணையில் மோகன்ராஜ், இளம்பிள்ளையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். பாலியல் வல்லுறவுக் காட்சியில் சம்பந்தப்பட்டுள்ள அந்தப் பெண், ஒருமுறை தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையை பஞ்சாயத்து பேசி சுமூகமாக தீர்த்தும் வைக்கும்படி மோகன்ராஜை அணுகியுள்ளார். இதை சாக்கிட்டு அவர் அடிக்கடி அந்தப் பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்தான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, உன் குடும்பப் பிரச்னை தொடர்பாக எனக்குத் தெரிந்த காவல்துறை நண்பர்களிடம் கூறிவிட்டேன். அதுகுறித்து பேச வேண்டும் என்று கூறி, தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். தனியாக வந்த அந்தப் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி இதுபோல் அவரிடம் மோகன்ராஜ் பாலியல் உறவு வைத்துள்ளார்.

ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணுக்கு மோகன்ராஜியின் சுயரூபம் தெரிந்ததால், அவரிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டார். மீண்டும் அவரை பலவந்தப்படுத்தி தன் வீட்டிற்கு வரவழைத்த மோகன்ராஜ், அவரை மிரட்டியும், தாக்கியும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தக் காட்சிகளை அவர் தனது செல்போனிலும் திருட்டுத்தனமாக வீடியோவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தன் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அவர்கள் மூலமாகத்தான் மோகன்ராஜியின் பாலியல் வல்லுறவு வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கல்லூரி மாணவிகள் உள்பட 7 பெண்களை மோகன்ராஜ் ஆபாசப்படம் எடுத்து மிரட்டி, பாலியல் வல்லுறவு கொண்டதாக சில மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ''மோகன்ராஜ் ஒரு பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதன் பேரில்தான் முன்னெச்சரிக்கையாக அவரை கைது செய்திருக்கிறோம். ஆனாலும், இந்த வீடியோவில் உள்ள பெண் தரப்பில் இரு ந்தும்கூட இதுவரை புகார் ஏதும் வரவில்லை. அதனால், ஹோமோசெக்ஸில் ஈடுபட முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி 7 பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஊடகங்கள்தான் சொல்கின்றன. காவல்துறை தரப்பில் அப்படியான வீடியோக்கள் கைப்பற்றப்படவில்லை. புகார்களும் வரவில்லை,'' என்றனர்.

இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் இமயவரம்பனிடம் கேட்டபோது, ''மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தியதால் அவரை எங்கள் கட்சியில் இருந்து கடந்த 9.7.2019ம் தேதியே நீக்கிவிட்டோம். அவர் யாராக இருந்தாலும், ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது குற்றம். அத்துடன், அதை வீடியோவில் பதிவு செய்தல் என்பது அதைவிட பெருங்குற்றம். அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

selam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe