சென்னை தி.நகர் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பிரம்மோற்சவம் விழா நடந்துவருகிறது. கடந்த நவம்பர் 22ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவின் ஒருபகுதியாக நேற்று(27.11.2019) யானை வாகனத்தில் தாயார் வீதிஉலா நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தான நிர்வாக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி கோவிலுக்கு வந்திருந்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு வழங்கப்பட்டது.