
திருச்சில் உரிய ஆவணம் இல்லாமல்கொண்டுவரப்பட்ட தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று பிரதான நுழைவு வாயிலில் உடைமைகளைச் சோதனை செய்யும் ஸ்கேனர் இயந்திரம் மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனைசெய்யப்பட்டது. அதில் இரண்டு பயணிகளின் உடமைகளைச் சோதனை செய்தபோது ஒரு பயணியின் பெட்யிடில் தங்கம் மறைத்து வைத்து கடத்தி கொண்டுவரப்பட்டதுதெரியவந்தது. கடத்தி கொண்டு வரப்பட்ட 3 கிலோவுக்கும்அதிகமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நகைகளை கொண்டு சென்ற சென்னையைச் சேர்ந்த லப்பை தம்பி மற்றும் அவரது நண்பர் ரியாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் எந்தவித ரசீது இல்லாமல் இந்த நகைகள் கொண்டுவரப்பட்டதுதெரியவந்தது. அதன்பின் வணிகவரித்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வந்த வணிக வரித்துறை அதிகாரிகள் அந்த நகைகள் அனைத்தும் உரிய ரசீது ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி, இருவருக்கும் 9 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை லப்பை தம்பி மற்றும் ரியாஸ் ஆகிய இருவரும் செலுத்திவிட்டு அந்த நகைகளை மீண்டும் சென்னைக்கு எடுத்துச் சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)