Advertisment

அதிரடி ஆக்‌ஷனில் அதிகாரிகள்...புகையிலை பொருட்கள் பறிமுதல்!!

Seizure of tobacco products

Advertisment

திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்துள்ளனர். இதனை அறிந்த மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் அந்த வீட்டில் இருந்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வழக்கு போடுவதற்காக இரண்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதே போல் மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், ‘தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்கள் கட்டாயம் விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது என்றும், வைத்திருந்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’என்று கூறினார்.

Tobacco trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe