Seizure of hawala money in Villupuram

Advertisment

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே புற காவல் நிலையம் அமைந்துள்ளது. அங்கு வழக்கம் போல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 4 பேர் நடந்து சென்றுள்ளனர். இந்த 4 பேர்களும் ஒரே மாதிரியான பைகளைக் கொண்டு சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது, பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து போலீசார் இது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வைத்து 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ் சிராஜுதீன், முகமது சித்திக்ராஜ், அபூபக்கர் சித்திக் ராஜ் முஹம்மது ஆகிய 4 நபர்கள் பணத்தைச் சென்னையில் எழுந்து திருச்சிக்குப் பேருந்து மூலமாக எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் பெரும் தனி நபரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இந்த பணம் யாரிடம் வாங்கி வந்தனர்?. எங்குக் கொண்டு செல்கிறார்கள்? எனத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.