Advertisment

திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாக பழைய நோட்டுகள் பறிமுதல்

கோவை வடவள்ளி பகுதியில் முன்னாள் திமுக பிரமுகர் வீட்டில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் நடத்தியஅதிரடி சோதனையின்போது பழைய 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யபட்டது.

Advertisment

கோவை வடவள்ளி பகுதியிலுள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் வீட்டில் கட்டுக்கட்டாக பழைய ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்இருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் வடவள்ளி காவல்துறையினர் நடத்திய சோதனையில் போது 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர் மேலும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

seizes old banknotes at DMK  person home

இதில் கோவையை அடுத்த வடவள்ளி லட்சுமி நகரில் தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. தி.மு.க. பிரமுகரான ஆனந்தன் இந்த வீட்டை ஷேக், ரஷீத் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தங்களிடம் இருப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு பழைய நோட்டு தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் அடிக்கடி பலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர் கோவை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பேரூர் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் அந்த பங்களாவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பங்களாவில் உள்ள அறைகளில் இருந்து 268 கட்டுகள் பழைய 500,1000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2.68 லட்சம் கைபற்றபட்ட 500,1000 ரூபாய் நோட்டு கட்டுகளில் முதல் தாள் மற்றும் கடைசி தாள்களில் பழைய 500, 1000ம் ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டு அதன் இடையே வெறும் காகிதங்கள் வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

போலீசார் அந்த பங்களாவை சோதனையிட வந்தபோதே அங்கு இருந்த இருவரும் தப்பிஓடி விட்டனர். அவர்கள் இருவரையும் வடவள்ளி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

kovai money
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe