Vehicles to be auctioned for profit - District Collector's announcement

Advertisment

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 136 வாகனங்களை பொது ஏலம் விட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 136 வாகனங்கள் மீது உரிமை கோரி இது நாள் வரை யாரும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

அதனால் உரிமை கோரப்படாத 136 வாகனங்களை அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணாசரஸ்வதி, இ.ஆ.ப., ஏலம் விட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான்அப்துல்லா தலைமையில் பொது ஏல நிர்ணய குழு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 5 நபர்கள் உள்ள இந்த குழுவில் மண்டல துணை இயக்குநர் (மோட்டார் வாகன பராமரிப்புத் துறை திருச்சிராப்பள்ளி) துணைத் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராக திருச்சிராப்பள்ளி தானியங்கி பொறியாளர் (மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) , உறுப்பினர்களாக மதன், காவல் துணை கண்காணிப்பாளர், அரியலூர் உட்கோட்டம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - I மண்டல போக்குவரத்து அலுவலர் அரியலூர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அரியலூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முன்னிலையில், காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 136 வாகனங்களையும் ஆயுதப்படை மைதானத்தில் 06/09/2021 அன்று காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விட்டு, ஏலத்தொகை அரசு ஆதாயம் ஆக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.