
திருச்சியில் உடம்புக்குள் மறைத்து வைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து மீட்புப் பணிக்காக சென்ற ஏர் இந்தியா விமானம் துபாயிலிருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில், விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அருண் பாஷா, புதுக்கோட்டையை சேர்ந்த சிவா இருவரும் தங்களுடைய உடலுக்குள் 1.250 கிலோதங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து உடலுக்குள் வைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்தபோது இசைவடிவில் தங்கத்தை உள்ளே வைத்திருந்த கடித்து இருந்துள்ளதை கண்டுபிடித்தனர். இருவருடைய உடலுக்குள் இருந்தும் எடுக்கப்பட்ட தங்கம் சுமார் 2 கிலோ 500 கிராம் எனவும், இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை என்பதும் தெரியவந்துள்ளது.