/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/truck-seize.jpg)
கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பந்தம், மற்றும் காவலர்கள் ராஜசேகர் (PC 960), கார்த்திக் (PC 976) ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் சட்ட விரோதமாக கிராவல் மணலைத்திருடிக் கொண்டுவந்த லாரியையும், ஓட்டுநரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் மணல் திருடிய குற்றத்திற்காக ஓட்டுநர் விஜய் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார். மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)