'SEET exam selection for medical studies' - Kamal posted an election statement on Twitter!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை மற்றும் அதன் முக்கிய அம்சங்களை ட்விட்டரில்வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து SEET (சீட்) தேர்வு நடத்தப்படும். மேடு, பள்ளம் இல்லாத மேம்படுத்தப்பட்ட சமூகநீதிவழங்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய, வேறுபாடுகள் களைந்தஅரசியல்நீதி வழங்கப்படும். படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு முழு மதுவிலக்கை கொண்டுவருவதேஇலக்கு. ஓராண்டில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தரவழிவகை செய்யப்படும் என அறிக்கையின் சாராம்சங்களைவெளியிட்டுள்ளார்.