Seerkazhi incident

Advertisment

சீர்காழியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரும், தாளாளருமான சாமுவேல் அங்கு பயின்று வந்த எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மகளிர் போலீசார் சாமுவேலைவிசாரணை செய்துபின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.