Seenuramasamy condemns attack on Nakiran journalists

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதேசமயம் நக்கீரனில் இது தொடர்பான செய்திகளை தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரனின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியாளர்கள் மீதான இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும், திரைப் பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பதிவில், “என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். மூத்த செய்தியாளர் அண்ணன் பிரகாஷ் அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். அவர் விரைந்து நலம் பெற விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.