'Seaman's life in danger'-Trichy Surya sensational complaint

முன்னாள் பாஜக நிர்வாகியும், திமுக எம்.பியின் மகனுமான திருச்சி சூர்யா தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்திருப்பதாக பாஜகவின் முன்னாள் நிர்வாகியும் திமுக எம்பி.யின் மகனுமான திருச்சி சூர்யா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சீமான் குறித்து பல்வேறு ஆடியோக்களை பதிவேற்றம் செய்திருப்பதை சுட்டிக்காட்டி தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்ததுள்ளதுநீதிமன்றம்.