Seeman's case dismissed

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கோவை, சேலம், கடலூர், தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என சீமான் தரப்பில் சென்னைநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. எந்தெந்த காவல்நிலையங்களில் என்னென்ன வழக்குகள், முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்கள் என்னென்ன என எதுவும் இல்லாமல் மனுதாக்கல் செய்துள்ளீர்கள் எனவே இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சீமான் தரப்பு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisment