Seeman who danced at the party!

Advertisment

சென்னைகலைவாணர்அரங்கில் நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியபண்பாட்டுப்பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்படகட்சியின்நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய விழாவில் கலந்துகொண்ட சீமான், “திருவள்ளுவர்ஒன்றேமுக்கால்அடியில் உலகை அளந்துவிட்டார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள். இப்போது சங்கம்வைத்துசாதி வளர்க்கிறார்கள்” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர்ஜேம்ஸ்வசந்தனின் ‘தமிழ் ஓசை’இசைகுழுவின் சங்கத் தமிழ் இசை விழா நடைபெற்றது. அதில், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அந்தப் பாடலின் முடிவில் சீமான் எழுந்து நின்று நடனமாடினார். தற்போது இந்தவீடியோகாட்சிகள்சமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது.

Advertisment