Seeman welcomes CM's opinion!

Advertisment

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில்,புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடுஅரசு ஒருபோதும் அனுமதிக்காதுஎனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில்தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோபாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனஇந்த ஆலோசனை கூட்டத்தில் அறிக்கை வாயிலாகதெரிவித்துள்ளார்.

 Seeman welcomes CM's opinion!

முதல்வரின் இந்த நிலைபாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் கருத்தை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “மும்மொழிக் கொள்கையை நடைமுறை படுத்தமாட்டோம் என இரு மொழிக் கொள்கையில் உறுதி காட்டியிருக்கும் முதல்வரைபாராட்டுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.