Skip to main content

நீறும் சோறும் கொடுக்கின்ற விவசாயி பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? - சீமான் கேள்வி

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

வேலூர் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாணியம்பாடியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், 

மத்திய அரசு தேசியே புலனாய்வு முகமை கொண்டுவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் ஒரேஒரு குரல் அசாதுத்தீன் உவைசி மட்டும்தான் எதிர்த்து குரல் கொடுத்தார். மத்த எல்லோரும் ஆதரிச்சு  ஓட்டு போட்டுட்டு வந்தவங்கதான். அதேமாதிரிதான் முத்தலாக் சட்டத்தையும் ஆதரிச்சு இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்திருக்காங்க. இந்த சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலன்னு சொல்லிக்கற அதிமுகவும் ஆதரிச்சியிருக்கு. அந்த கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் முத்தலாக் மசோதாவை வரவேற்றுள்ளார்.
 

seeman vellore election campaign!


தமிழகத்தில் பிஜேபி ஒரு சீட்டும் இல்லாமல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்றது. பிஜேபிக்கு இசுலாமிய பெண்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை. கடந்த காலங்களில் நரேந்திர மோடி அரசு பல்லாயிரக்கணக்கான இசுலாமிய பெண்களை விதவை ஆக்கியது. அவசர அவசரமாக முத்தலாக் மசோதாவுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்தீர்கள். இசுலாமிய பெண்களுக்கு பாதுகாப்பு என்றால் நபிகள் நாயகம் சல்லம் தந்துள்ள ஷரியத் சட்டம்தான் சிறந்த பாதுகாப்பு.

இந்தநாட்டில் இந்திக்காரனிடம் நாம் அடிமையாக இருப்பது விட ஆங்கிலயர்களிடம் அடிமையாக இருந்திருக்கலாம். முகலாய மன்னர்கள் ஆட்சி செய்தபோது யாரும் எங்களை பார்சி மொழியையும், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஆங்கிலம் படித்தாகனும் என்று கட்டாயப்படத்தவில்லை. ஆனால் இவர்கள் நம் மீது இந்தியை திணிக்கப் பார்கின்றனர்.
 

seeman vellore election campaign!


இன்றைக்கு பிறக்கின்ற குழந்தைக்கு 25 ஆண்டுகள் கழித்து இந்த பூமியில் வாழ இடம் இருக்காது. இல்லையென்றால் இந்த பூமி அவர்கள் வாழ்கின்ற இடமாக இருக்காது. இதில் இரண்டில் ஒன்று நடக்கும். தமிழகத்தை ஆளும் அடிமை எடப்பாடி தலைமையில் உள்ள இந்த ஆட்சியாளர்களால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை. வேளாண்மை நசிந்து நாசமாகிவிட்டது. வேளாண் குடிமக்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருகின்றனர். தடுக்க முடியவில்லை. கல்வியை தனியார் மயமாக்கி மிகப்பெரிய வர்த்தக சந்தையாக மாற்றிவிட்டனர். மருத்துவம் மிகப்பெரிய விற்பனை பண்டமாக மாறியுள்ளது, இவைகள் தடுக்க முடியாத இடத்தில் உள்ளது.  

விரைவாக சென்னைக்கு செல்ல 8 வழிச்சாலை போடுகின்றனர். கார் ஓட்டுபவர்களுக்கு கவலைப்படுகின்றார் இந்த ஆட்சியாளர்கள். காரில் உள்ளவர்களுக்கு நீறும், சோறும் கொடுக்கின்ற விவசாயி பற்றி ஏன் இந்த அரசாங்கம் கவலைப்படுவதில்லை. உலகத்திற்கு முன் மாதிரியாக வாழ்ந்த இனம் தமிழர்களாகிய நாம்தான். எல்லாவற்றையும் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தோம். உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்த இனம் தமிழ் இனம்தான் என்றார்.

வாக்காளர்கள் அரசியல்வாதிகளிடம் 500, 1000ன்னு வாங்கிக்கிட்டு ஓட்டை விற்கிறார்கள் நம் மக்கள். நம்மிடம் நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கி நாட்டை விற்கிறார்கள். கேரளாவில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் இல்லை. அவர்கள் வாங்குவதும் இல்லை. மாற்றம் வேண்டும்மென்றால் உங்களை நம்பி போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமிக்கு வாக்களியுங்கள் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.