


Published on 23/07/2022 | Edited on 23/07/2022
தமிழ்நாடு அரசு சொத்து வரியைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உயர்த்தியது. மேலும், தற்போது மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதேபோல் மத்திய அரசு சமீபத்தில் ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் தயாரிக்கும் நிறுவனம் எதிரில் உள்ள உழவர் சந்தையில் இந்தக் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.