28-08-2020 காலை 11 மணியளவில் செங்கொடி நினைவேந்தல் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மகளிர் பாசறை நிர்வாகிகளுடன் இணைந்து பதாகைஏந்தி முழக்கங்கள் எழுப்பி தொடங்கிவைத்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், ஏழுதமிழர்கள்விடுதலைக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கிய தங்கை செங்கொடியின் நினைவுநாள் இன்று. ஏழுதமிழர்கள்விடுதலையை சாத்தியப்படுத்துவதே செங்கொடியின் பெருங்கனவாக இருந்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலைமுறை காலம் கடந்துவிட்ட போதும் அவர்கள் விடுதலை ஆகாததுதான் பெரும்துயர். ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகளின் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது என்று தெரிவித்துள்ளார்.

Advertisment