ADVERTISEMENT

“நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா.?- சீமான் 

07:29 AM Oct 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் தேர்தல் கள தயாரிப்பு நிகழ்விற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான், இன்று திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் கள தயாரிப்பு நிகழ்விற்காக தன்னுடைய கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க வருகை புரிந்த பொழுது, செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது மாதனூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது வரை பதவி ஏற்காமல் இருக்கும் பட்டியலின பெண் குறித்து கேள்வி எழுப்புகையில், “இது என்னிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி அல்ல. நீங்கள் தானே சொல்கிறீர்கள், சனாதனத்தை ஒழிப்போம். இது பெரியார் மண். சகோதரத்துவம், சமூக நீதி என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஒரு பட்டியலின பெண் தேர்தலில் வெற்றி பெற்றும் தற்பொழுது வரை அவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைக்காததால் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் எல்லாம் வெறும் கனவாக இருக்கிறது.

இது அந்த தங்கச்சிக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமாக நான் கருதவில்லை; ஒரு தேசிய இனத்திற்கான ஒவ்வொருத்தருக்கும் அவமானமாகத்தான் கருதுகிறேன்.” என்று கூறியவர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கான வளம் குறித்து பேசுகையில், “சந்தன மரங்களின் வளம் தான் இந்த மாவட்டத்திற்கான வருவாயாக இருந்தது. தற்பொழுது சந்தன மரங்கள் இல்லை. வனத்துறை அமைச்சர்கள் மீண்டும் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் (சந்தன கடத்தல் வீரப்பனை குறிப்பிட்டு) எங்க ஆளு இருக்கும் வரையில் காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்தது. காவிரி பிரச்சனை போன்ற நிலை எல்லாம் இல்லாமல் இருந்தது. வீண் பழி சுமத்தி மரத்தை வெட்டினான், யானை தந்தத்தை கடத்தினார் என்று கூறி பழி போட்டு விட்டார்கள் அவர் இருக்கும் வரை காடு பாதுகாப்பாக இருந்தது. நாகப்பாவை தூக்கத் தெரிந்த வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா? அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை ஏனென்றால் அவர் தமிழ் மாண்பு உடையவர் என்று கூறும்பொழுது சிரிப்பலை எழுந்தது. மேலும் வன பாதுகாப்பு குழு காட்டில் சந்தன மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT