Advertisment

“சாதி, மதம், இனம் எங்களுக்குக் கிடையாது..” -  சீமான் 

Seeman speech in nellai

Advertisment

தமிழ் தேசிய தன்னுரிமைக் கட்சியின் தமிழ் மக்கள் தன்னாட்சி மாநாடு ஜூலை 24 அன்று பாளையங்கோட்டையில் நடந்தது. அக்கட்சியின் தலைவர் வியனரசுவின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையுரையாற்றினார். இதில் ஜீவாகனி, சுகந்தி, மை.பா.ஜேசுராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

Seeman speech in nellai

ஜீவாகனி, “இப்போது மாநிலவாரியாக தன்னாட்சி பற்றி பேச ஆரம்பித்து விட்டன. ஐ.நா சபையின் ஆர்ட்டிக்கிள் 12 உட்பிரிவு (1)ன் படி ஒரு பரப்பில் வாழ்கிற மக்களின் பண்பாடு, கலாச்சாரம் அரசியல் மற்றும் தன்னாட்சி காப்பாற்றப்பட வேண்டும் மக்களின் எண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்கிறது. சர்வதேச சமூக தேசிய தன்னுரிமைத் திட்டம் போட வேண்டும். மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி பேச்சோடு போய்விட்டது” என்று பேசினார்.

Advertisment

Seeman speech in nellai

சுகந்தி, “தமிழ் நாடு தமிழர்க்கே. நான் தமிழர். இந்த மண்ணின் மைந்தன் நான். நாம் தான் ஆளவேண்டும். தன்னாட்சி வேறு, சுயாட்சி வேறல்ல, இரண்டும் ஒன்று தான். 2026ல் தமிழ் நாடு தமிழர்க்கே, என்ற நிலை வரும். சட்டமன்றங்களில், தீர்மானங்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். அணை மசோதா என்று வந்தால் தண்ணீர் கிடைக்காமலே போய்விடும். நம்முடைய உரிமையைப் பெற வேண்டும். அது தான் தன்னாட்சி. 3600 கிலோ மீட்டர் கடல் அதானிக்குக் குத்தகை வழியில் சொந்தமாகி விட்டது. அங்கே போய் தமிழன் மீன் பிடிக்க முடியுமா. இது ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய காரியமா. நம்முடைய உரிமைகள் நம்மை விட்டுப் போகிறது. மத்திய அரசு, குத்தகையை, நான் தான் பண்ணுவேன் என்கிறது அதனால் தான் நீட் தமிழக அரசின் கையில் இல்லை. எனவே தான் ஒவ்வொரு மசோதாவிலும் நம் உரிமைகள் மறுக்கப்படுகிறது. வரலாற்றை மீண்டும் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசியல், பண்பாடு கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் அதிகாரம் முழுவதையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலத்தில் எப்படி ஆட்சி நடத்துவது. தன்னாட்சி அதிகாரம் வந்த போது தான் இந்த சுயாட்சித் தீர்மானம் நிறைவேறும். அதற்கு உதாரணம் தான் கல்வி” என்றார்.

Seeman speech in nellai

மை.பா.ஜேசுராஜன், “இந்தியா என்ற தேசம் வேண்டும். அதை ஒரு பெரிய கட்சி நல்லபடியாக வழி நடத்த வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி செய்த தவறை விட, இப்போதைய பா.ஜ.க. அரசு அதிகமாகவே செய்கிறது. இந்திய தேசம் அது மிகப் பெரிய சந்தை. இரண்டு பேருக்கு மட்டுமே லாபம். வியாபாரிகள். கார்ப்பரேட்களுக்குத் தேவை. ஆகவே தான் அது அரசியல்வாதிகளுக்கு வேட்டைக் களமாகிறது. இப்போது தன்னாட்சியை வைத்துத்தான் தங்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். இந்துத்துவாவுக்கு ஒரு மாற்று வேண்டும். மதமும் சாதியும் திணிக்கப்படுகிறது” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், “தமிழ் தேசிய அரசியல் கொள்கை தான் என் உயிர். அதற்காகத்தான் நம்முன்னோர்களான பூலித்தேவன், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே போராடியுள்ளனர். அதை நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழ் திருத்தாய் பெற்ற தமிழ்நாடு. இது என் தேசம். உரிமைகளைக் கேட்டால் கிடைக்காது போராடித்தான் பெற வேண்டும். நாம் சிங்கங்கள் அல்ல புலிகள். எங்கள் அதிகாரம் எங்கள் மக்களுக்கானது. நமது நாட்டை நாமே ஆளலாம். புரட்சியாளர் அம்பேத்கர் கூட தமிழ் இனத்திற்குத்தான் என்று சொன்னார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திர வீரனாகச் சாவதே மேல். நாம் சாகலாம். உரிமைகள் சாகக் கூடாது. மானமே பெரிது. வெற்றிவேல், வீரவேல் என்று வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடினார்கள். உங்களுக்குப் போதிக்கும் போது புரியாது. ஆனா பாதிக்கும் போது புரியும்.

Seeman speech in nellai

உலகத்தில் எத்தனையோ இனமிருந்தாலும் தமிழ் இனம் போன்று ஒன்றில்லை. காக்கை, குருவி, எங்கள் சாதி. சாதி, மதம், இனம் எங்களுக்குக் கிடையாது. புதிதாக நான் எதுவும் சொல்லவில்லை. நான் வரலாற்றுப்படி சொல்கிறேன். வரலாறு என்பது கடந்த காலத்தைப் படிப்பது அல்ல, அது நிகழ் காலத்தை உணர்த்துவது வரலாற்றைப்படி. நாடு என்னுடையது. நீ யார் ஒதுக்கிக் கொடுக்க. பிச்சை புகினும் கற்கை நன்றே. மொழிக்கேற்ப வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் படிக்கல்ல. அவர் பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தவர்.

இயற்கை குடிச்சுக்க, குடிச்சுக்கோன்னு தூய நீரா கொட்டுது. அதை கர்நாடகாக்காரன் ஒரு ஓரமாகொண்டு போயி வைச்சுக்கிட்டு கோடி கோடியாய் விலை பேசுறான். மனித உடலுக்கு ரத்த நாளம் போல, நதிகள் நாட்டுக்கு ரத்த நாளம். அணையக் கட்டிக்கிட்டு அது எனக்குத் தான்றான். இந்த சலசலப்புக் கெல்லாம் பனங்காட்டு நரி அஞ்சாது.

கடல் அலை. சூரிய ஒளி, காற்றாலையில் மின்சாரம் தயாரிப்பு மாசு இல்லை. ஆனா அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பு மாசு. அதானிகையில். ஏன் கல்வி, அது ஒன்றியம் கையில். அதனால் தான் மாநிலங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்று சொல்றோம். என் நிலம் என் இனம். என் உரிமை ஆனா நீ முணு இனத்திற்கு ஜி.எஸ்.டி. வரி. சாலை வரி, வீட்டு வரி, தண்ணி வரி, எல்லாத்துக்கும் வரி, 90 லட்சம் கோடி, ஒன்பதாயிரம் கோடின்னு வரி. 75 விழுக்காடு வரியாகப் போகிறது. எட்டு ஆண்டுகளில் அம்பானியையும் அதானியையும் வளர்த்து விட்டார்கள். சட்டங்கள், திட்டங்கள், அந்த நாட்டு மக்களுக்காக, அவர்கள் எண்ணப்படி இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் விடுதலை பெற வேண்டும். நாங்கள் போராடுவது சாவதற்கல்ல. எங்கள் இனத்தைக்காப்பாற்ற” என்று பேசினார்.

இந்த மாநாட்டில், தாமிரபரணி ஆற்றுநீர் உரிமை, வெள்ள நீர்க்கால்வாய் திட்டம், மதுக்கடைகள் மூடல், அயல் மாநில வணிகர்களுக்குத் தடை, அயலார் குடியேற்றத்தடுப்பு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிவேற்றப்பட்டன.

seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe