Advertisment

'அய்யா நல்லகண்ணுக்கு இல்லாத தகுதி இங்கே எவருக்கு இருக்கிறது'-சீமான் பேட்டி!  

seeman

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த'நாம் தமிழர்' கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்பேசுகையில், "தற்பொழுது அரசியல் கட்சித் தொடங்கும்நடிகர்கள்போராட்டத்திற்காகவீதிக்குவராமல்தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர். இது தான் மக்களைஇழிவாக மதிப்பிடுவது. அரசியல் செய்யாமல் நேரடியாகத் தேர்தலுக்கு வருவது, மக்களைஇவர்கள்குறைவாகமதிப்பிடுவதாக நான் பார்க்கிறேன்.அதனால்தான் எனக்குக் கோபம்வருகிறது.

Advertisment

ரஜினிகாந்திற்கும்,கமலுக்கும் அரசியலில் விழும் அடியில், இனி எந்தநடிகருக்கும்வெறும் திரையில் நடித்துவிட்டோம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டுஅரசியல் கட்சிஆரம்பிக்கலாம் எனும் எண்ணம் வராது. நடிப்பது மட்டுமே நாடாளத் தகுதி என்ற எண்ணத்தை இத்தோடுஒழிக்கவேண்டும் என நினைக்கிறோம். நீயும் அங்கிருந்து தானே வந்தாய் என்பார்கள். நான் ரசிகர்களைச் சந்திக்கவில்லையே. மக்களைச் சந்தித்தேன். இந்த நாட்டை ஆளக்கூடியதகுதி இருக்கிறது என்றால், ஐயா நல்லகண்ணுக்குமட்டும்தான் அது இருக்கிறது. அவருக்கு இல்லாத தகுதி இங்குஎவருக்கு இருக்கிறதுஇந்த நாட்டில். அவர் எங்க இருக்கிறார், நீங்க எங்கஇருக்கீங்க. ஒருவர் பேசுவதில்லை அவரைப்பற்றி.நாட்டின்விடுதலைப் போராட்டத்தில் சுருட்டால் மீசையைச் சுட்டும்போராட்டத்தைவிட்டு விலகாதஅவர் எங்கே?ஏதுவுமேஇல்லாமால் நேரடியாக வந்து முதலமைச்சர் ஆகிடுவோம்என்கிறநீங்கள் எங்கே?

Advertisment

எம்.ஜி.ஆரை பொறுத்தவரைஅவர் விடுதலைப்புலிகள்தலைவர் பிரபாகரனை ஆதரித்தார்.ஈழவிடுதலைப் போரில்நூறு விழுக்காடு உண்மையாக இருந்தார்.அதனால் அவர் மீது அளப்பரிய மரியாதை இருக்கிறது. மற்றபடி அவர் என்ன சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். தமிழ் வழிக்கல்வியை ஆங்கில வழிக்கல்வியாக மாற்றியதே அவர் தான்.கல்வி, மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்தவரும் அவர் தான். முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கையெழுத்திட்டு கேரளாவுக்கு கொடுத்ததும்அவர்தான். இப்படிப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் இப்பொழுது தேவை காமராஜரும்,கக்கனும்தான்என்றார்.

jayakumar

இந்நிலையில் சீமானின்எம்.ஜி.ஆர்குறித்த பேச்சுக்கு அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தஅமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''எம்.ஜி.ஆர் மீது புழுதியைவாரித் தூற்ற நினைத்தால்அது உங்களுக்கே பெருங்கேடாக அமையும். எம்.ஜி.ஆர் புகழை அழிக்கவேமுடியாது'' என்றார்.

politics kamalhaasan rajini seeman naam thamizhar nallakannu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe