நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தமிழக சட்டமன்ற தேர்தலுக்கானபிரச்சாரத்தை துவங்கிவிட்டார். தேர்தல் திருவிழா தொடங்கும்முன் தன் குடும்பத் திருவிழா ஒன்றை நடத்ததடபுடல் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். 5000 விருந்தினர்கள்... 108 கிடாய்... எனபிரம்மாண்டமாகநடக்கவிருப்பது என்ன விழா?
நாம் தமிழர் கட்சியை தொடங்கி நேரடி அரசியலுக்கு வந்து களமாடிவந்த சீமான், நெடுநாட்களாக திருமணம் செய்யாமல் இருந்தார். தான் ஒரு ஈழத்தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன்என்றுகூறியிருந்தார். இந்நிலையில்முன்னாள் தமிழகஅமைச்சர் காளிமுத்துவின் மகளானகயல்விழிக்கும் சீமானுக்கும் காதல் மலர்ந்து, 2013ஆம் ஆண்டுஇவர்களது திருமணம் நடந்தது. 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு மகன் பிறந்தார். தனது மகனுக்கு'மாவீரன் பிரபாகரன்' என்று பெயர் சூட்டினார் சீமான்.
தன் மகன் மாவீரன் பிரபாகரனின் முதல் பிறந்தநாளை2020 ஜனவரியில் கொண்டாடிய சீமான், தற்போது அவருக்குக் காதுகுத்தும் விழாவைபிரம்மாண்டமாக நடத்த முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்துள்ளார். சிவகங்கை அருகிலுள்ள தனது குலதெய்வம் வீரகாளியம்மன் கோவிலில் 108 ஆடுகள் வெட்டி மகனுக்குக்காதுகுத்தவுள்ளார் சீமான். 5000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விழாவுக்காக500, 500 கிலோவாகப் பிரித்து சமையல்நடக்கவிருக்கிறதாம். வரும் திங்களன்று (15-02-2021) அண்ணன் நடத்தவிருக்கும் இந்த விழாவால் அந்தப் பகுதி குலுங்குமென மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள்.