
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று (13/05/2021) பிற்பகல் காலமானார். இந்த நிலையில், சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உள்ள வீட்டில் அவரது தந்தை, தாய் வசித்து வந்தார்.
சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13/05/2021) பிற்பகல் காலமானார். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரது பூத உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதே போல் சீமானின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் அடக்கம் அரணையூர் தேவாலயத்தில் இன்று மதியம் நடைபெற்றது.