தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் சசிகலா தங்கியிருக்கும் இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் நேரில் வந்து சசிகலாவை சந்தித்தனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இன்று சசிகலாவை நேரில் சந்தித்தார்.